முட்கள் (பாகம்-3)

இரண்டு மாதங்களுக்கு பிறகு...!

சுமார் 2463 ச.கி பரப்பளவில் பரவியிருந்த அந்த உத்திரபிரதேசத்தின் யமுனை கரையில் இருக்கும் மின்னனு நகரம் தான் "நொய்டா".

அன்று அத்தனை பெரிய மழை கொட்டி தீர்க்கும் என கனவிலும் அவள் எதிர்பார்க்கவில்லை.

அந்த முட்டக்கண்ணியின் கண்ணீரும் இன்று மழையோடு மழையாய் மறைந்து கறைந்து போகும் என கடந்த இரண்டு மாதங்களில் எப்போதும் நினைத்திருக்கவில்லை.

அந்த நகரத்தின் பெரிய கட்டிடங்களை கடந்து சென்று கொண்டிருந்த அவள் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கொள்ள கண்டாள்.


அச்சச்சோ!குடை வேற எடுக்க மறுந்துட்டியே மண்டு என்று தன்னை வைந்து கொண்டே,மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி அந்த கால்கள் வேகம் பயின்று கொண்டிருந்தன.

இரயில் நிலையம் புக இரண்டு வினாடி இருக்கையில் சட்டென்று அவளை நனைத்து பேரானந்தம் கொண்டது அந்த பாலாய்போன மழை.


நனச்சுட்டியா!பரவாயில்ல இப்ப என்ன பண்றேனு பாக்குறேனு தனது கருப்பு நிறத் துப்பட்டாவை அதன் மஞ்சள் நிற கரை ஓரம் எடுத்து முகம் சுற்றி கட்டிக்கொண்டு படபடவென ஓடத்துவங்கினாள்.


இரயில் நிலையம் சில அடி தூரம் தான் என்பதால் லேசான நனைதலுடன் மழையிடம் வென்றதாய் எண்ணியவள் குதுகலித்து உள்நுழைந்தாள்.


டிக்கெட் கவுன்டரில் சென்று தன் ஒற்றைக் காலை உதறிவிட்டு..தலையில் இருந்த துப்பட்டாவை கலட்டி தன் மீது போட்டுக்கொண்டு தோள் பையை எடுத்தாள்.அதில் ஒற்றை 500 ரூபாய் மட்டுமே இருந்தது.உள்ளிருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்து ஆடையை மெதுவாக உலர்த்திக்கொண்டாள்.


அவள் ஓரமாகத் தான் நின்றிருந்தாள் ஆனால் அருகில் நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவரின் மேல் ஈரம் தெரிக்கவே, சாரிங்க தெரியாம நடந்துருச்சு என்றபடி நிமிர்ந்து பார்த்தவள்;அப்படியே வார்த்தையை முடிக்காமல் டிக்கெட் கவுண்டருக்கு நடையை கட்டினாள் கயல்.


அண்ணா டெல்லி ஒரு டிக்கெட்(கதை புரிதலுக்காக தமிழ் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது) என்று அந்த ஒற்றை ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் கயல்.


அந்த நோட்டை பிரித்து பார்த்தவர்,கிழிந்திருக்கிறது இந்த பணம்! வேறு ;சீக்கிரம் !என்று கவுன்டர் டேபிளை வேகமாகத் தட்டினார்.


மழையில் நனைந்ததில் பிய்ந்தது போல என்று அவள் எண்ணி முடிப்பதற்குள்,அவள் சாரி கேட்ட அந்த நபர் இரண்டு டிக்கெட்டுகள் நொய்டாவுக்கு என்றான்.

ஆமாம்,யவனின் கைகள் தான் அது.

அவள் ஏதும் பேசாமல் நகர்ந்து அங்கிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.

அவள் முன்னால் டிக்கெட் ஒன்றை நீட்டியபடி ,இப்ப கூட நான் என்ன பர்சனல் வேலையா இங்கயும் வந்தேன்னு கேட்கமாட்டியா?என்று வந்த கண்ணீரை வாரிச்சுருட்டி அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டான்.


-suganya_kk


#tamillovestory #tamillove #tamilkavithai #tamilbook #tamilNovel #tamilmai #kadhalkathai


Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com