முட்கள் (பாகம் -2)

கலைந்திருந்த அலங்காரத்தை சரி செய்துவிட்டு கையில் காப்பியை எடுத்து வந்த தட்டை கொடுத்து அழைத்துச் சென்றாள்.

எல்லோருக்கும் காப்பியை கொடுக்க சொல்லு,என்று கதிரேசன் கூறவே ஒவ்வொருவரிடமும் கொண்டு சென்று தட்டை நீட்டியபடி எடுத்துக்கோங்க என்றபடி நின்றாள்.

அங்கு வந்திருந்த அனைவரும்,ம்ம்ம் பொண்ணு ரொம்ப லெட்சனமாத்தான் இருக்கு என்று அழுத்துக்கொண்டும்,முணுமுணுத்துக் கொண்டும் இருந்தனர்.உட்காரு மா,என்று அவளை அழைத்து தன்னருகில் மாப்பிள்ளை யின் தாயார் அமரவைத்தார்.

பதட்டம் அவளுக்கு இன்னுமே அதிகமாகிப் போனது.

அக்கா, அப்புறம் என்ன?சில நிமிடங்களில் பொண்ணு பிடிச்சிருந்தா மத்தவிஷயம் பேசலாமே என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.

என் பையன் இன்னும் ஒன்னும் சொல்லலையே!என்றபடி அவனை எசக்கியம்மா அவனை பார்க்க..ம்ம்ம் நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேச நினைக்கிறேன் என்றான் யவன்.

சிலருடைய முகங்கள் சுருங்கித்தான் போயின என்றாலும், இப்போதெல்லாம் இது மிகவும் சகஜமாகிப் போய்விட்டது என்று கூறி மாப்பிள்ளையின் அப்பா யவனுக்கு ஒப்புதல் அளித்தார்.

ஒரு நண்டையும் கூட்டத்தில் இருந்த ராசம்மா விரட்டிவிட அவர்கள் பின்னால் ஊர்ந்துக்கொண்டு சென்றது.

பின்னால் வந்த வாண்டு திருதிருவென விழிக்க இந்தா மாமா மொபைல் நல்லாருக்கானு பாத்துட்டு இரு என்று பாதியிலேயே கலட்டிவிட்டு சென்றான் யவன்.

அதை பார்த்து பளிரென பற்கள் தெரிய நகைத்தாலும் தலையை சொரிந்தபடி கண்களை உயர்த்தி பார்த்து ராசம்மாவை உசுப்பேத்த கயலின் அத்தை ஒருத்தி மெதுவாய் வீட்டிற்குள் நுழைந்தாள்.

யவனுக்கு சிரிப்பை கட்டுபடுத்திக்கொள்ள முடியவில்லை. எல்லாமும் புதிதாய் தோன்றியது.ஒருவாராக இயல்பு நிலைக்கு வந்த அவன் கயலிடம்,நான் அஹமதாபாத் ஐ.ஐ..டியில் படித்தேன் என தனது பேச்சை தொடங்கினான்.அவள் கைகள் நடுகங்கியது.அந்த நடுக்கத்துடனே ம்ம்ம் கொட்டிக்கொண்டாள்..!அவளது நடுக்கத்தையும் பயத்தையும் ரசித்துக்கொண்டே மேலும் பேசத்தொடங்கினான்.நீங்க டெல்லியில் படிச்சிங்கல்ல?என்றான்.ஆமாம் என்று தொண்டையை சரிசெய்து கொண்டு மெல்லிய கீச்சு குரலில் கூறினாள்.மீண்டும் ஒரு அசாத்திய புன்னகையுடன் தலை நிமிராத அவளை பார்த்து நான் ஒரு ஐந்து முறை வந்திருக்கிறேன்.அதில் நான்கு முறை பெர்சனல் வேலையாக வந்தேன்.ம்ம்ம் என்று மறுபடியும் ஒரு மெல்லிய சப்தம் கயலிடமிருந்து எட்டிப்பார்த்தது. என்ன வேலைனு கேட்க மாட்டிங்களா?என்ற ஒரு கேள்வியும் எழுப்பிப்பார்த்தான்..அவள் வாயை திறப்பதாகவே தெரியவில்லை.கைகளை பிசைந்தபடியே நின்றிருந்தாள் கயல். நான் ஏதும் மிரட்டவில்லையே! ஏன் இத்தனை பதட்டம் என்று கூறி அருகில் இருந்த மண்பானையிலிருந்து தண்ணீர் கொடுத்து அவளை நாற்காலியில் அமர வைத்து சிறிது நேரம் அமைதியாக இருக்க கூறினான் யவன்.


சில நிமிடங்கள் கடந்ததும் அவளையே பார்த்தப்படி புற்னகைத்திருந்த அவன் இதழ்கள்; புரிஞ்சுக்க டைம் ஆகும்தான்..ஆனா,விட்டுகுடுத்து வாழலாம்,நான் தொனதொனனு பேசிட்டே இருப்பேன்.நீங்க எப்படி என்று அவளை பார்த்து அத்தனை பற்களும் ஒளிர புன்னகை புரிந்தான்.

ஐய்யோ!எப்படிப்பட்ட பெண்ணும் விழுந்துவிடும் அத்தனை அழகான புன்னகை அது.அந்த புன்னகையால் விழும் கண்ணக்குழியில் விழுந்து மீண்டு வர ஒருபாடாகி விட்டது கயலுக்கு..!

நீங்க இன்னும் பதில் சொல்லல என்றவனுக்கு புன்னகை மட்டுமே பரிசாக அளித்தாள்.

எனக்கு உங்கள பார்ததுமே ரொம்ப பிடிச்சிருச்சு என்றவனுக்கு அப்படி என்ன என்னை பற்றி பார்த்த நொடியில் புரிந்திருக்கும் என உள்ளூர நினைத்திருந்தாளே தவிர வார்த்தைகளை உமிழவில்லை.


உங்களோட முடிவ சொன்னா நான் உங்க மொபைல் நம்பர வாங்கிட்டு கல்யாண வேலய பாப்பேன் என்று கவிழ்ந்திருந்த அவளை குனிந்துபடி எக்கி குறுநகையோடு கேட்டான் யவன்.

அதற்கும் அவள் சிரித்தாளே தவிர அவள் வார்த்தைகள் எல்லாம் வற்றிப்போயிருந்தன.

அதற்கும் சூரியனை பார்த்த தாமரையாய் தலைநிமிர்ந்து புன்னகையை மட்டுமே மறுமொழியாய் தந்தாள்.தலையாச்சும் அசைக்கலாமே என்று யவன் கூற,ம்ம்ம் என்று தன் தலையசைத்தாள் கயல்.உங்களுக்கு எதாச்சும் என்ட கேக்கனுமா?என்றபடி அவளை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் யவன்.

ம்ம்ஹ்ம்ம் என்றபடி தலைகவிழ்ந்தாள் கயல்.


இருவரும் எல்லோரும் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

என்ன கேக்குராரு மாப்பிள்ளை என்றபடி கயல் காதுகளில் கிசுகிசுத்தாள் சாரதா.சும்மா இரு என்று கயல் அவளை மெதுவாய் கிள்ள வாயை பொத்திக்கொண்டு இடத்தை விட்டு நகர்ந்தாள் சாரதா.


என்னப்பா பாக்கு வெத்தலை மாத்தும்முன்ன மத்தது பேசலாம்ல என்று எசக்கி அவனை பார்க்க ,யவனும் பேசும்படி தலையசைத்து செய்கை செய்தான்.


எல்லாம் தெரிஞ்சுதான் வந்தோம்.சின்னவயசுலயே கயல் கைம்பெண்ணா மாறியிருந்தது எனக்கு பிரச்சனை இல்லேனாலும்;அவள ராசி இல்லாதவனு யாரும் சொல்லிடக்கூடாது நாளைக்கு.ஊரு வாய நம்ம தான் அடைக்கனும் என்று எசக்கி கூறியது கயலை தூக்கிவாரிப்போட்டது.வழிய இருந்த கண்ணீரை தேக்கி நிறுத்தி வைத்திருந்தாள் கயல்.


அவர்கள் ஊர் வழக்கப்படி குழந்தை திருமண பழக்கம் இருந்தது .அவள் மணமாகி ஆறுமாதங்களில் தனது கணவணை இழந்திருந்தாள். அதன்பின் அவள் மன அமைதியை குழைக்க வேண்டாமென எண்ணி அதை அவளுக்கு புரியாத வயதில் திருமணம் செய்ததை நினைத்து வருந்தி தண்ணுடனே வைத்திருந்தார்கள் கயலின் தாய்தந்தையர்.


கூட்டத்தில் ஒருத்தர் ஊர் சொல்றதெல்லாம் இருக்கட்டும்;நீங்க என்ன சொல்றீங்க என்றார்.


ஊர்ல உள்ள எல்லாருக்கும் ராசம்மா வீட்டுக்கு கயல் மறுக அவ மகளாவே வந்தப்பரம் தான் இந்த செல்வாக்கெல்லாம் வந்துச்சுனு நல்லாவே தெரியும்.தெரியாம பேசுரவங்கள பத்தி நீங்க கவலபடாதீக மதினி என்று இன்னொரு குரலும் கேட்டுச்சு.


மத்தவங்கள பத்தி நான் யோசிக்கல ஆனா எனக்குனு இருக்குறது ஒரே ஒரு பையன் அவன் கல்யாணத்த சிறப்பா பண்ணணிடனும் என்றாள் எசக்கி.என்னத்தான் எதிர்பார்க்குறீங்கனு பளிச்சினு சொல்லுங்க என்றார் அங்கே கம்பீரமாய் இருந்த மீசைகாரர் ஒருத்தர்.

அவரை பார்த்ததுமே எசக்கிக்கு நடுநடுங்கி கொண்டது.இருந்தாலும் மறைத்து கொண்டாள்.


ஒரு 200 சவரன் நகை , ஒரு பெரிய வீடு,ஒரு காரு,வஷ்திரா மண்டபத்துல கல்யாணம் என்று அடுக்கிக்கொண்டே சென்றாள் எசக்கி.


பையன படிக்க வச்ச செலவு அவ்ளோ தானா? இல்ல வேறெதுவும் மிச்சமிருக்கா? அரசாங்க வேல இல்ல ஐ.டி யில வேல பார்த்தாலும் உனக்கு பொண்ணு கிடையாது.இறந்தது என் பையன்.ஆனா நீ நான் பெறாத மகளான கயல காயப்படுத்துர.உனக்கு எவ்ளோ குடுத்தாலும் என் பொண்ணுக்கு உன் வீட்டுல நிம்மதி கிடைக்காதுனு உன் பேச்சிலயே புரிஞ்சுக்கிட்டேன் எசக்கி.நீங்க போய்ட்டு வாங்கனு மீசைக்காரர் மனம் கனத்த குரலில் சொன்னார்.


நான் பேசுரது தப்பா தெரியலாம்.ஆனா எல்லா அம்மாக்களுக்கும் அவங்க மட்டும் விதிவிலக்கா என்ன?அவங்கள மாத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் கயலுக்கு இருக்குனு நான் நினைக்குறேன்.

நீங்க நாள பாருங்க.கயலோட சந்தோஷத்துக்கு நான் பொறுப்பு.ஒரு பெண்ணாய் இருந்தும் அம்மா இப்படி பேசினதுக்கு நான் வருத்தப்படுகிறேன்.அம்மாவிடம் நான் பேசிக்கொள்கிறேன்.

வெட்கி தன் தவறை உணர்ந்த இசக்கி பாக்கு வெத்தலே தட்டை எடுத்து நீட்டினாள்.

அதை அந்த மீசைகாரரும் வாங்கி கயலை பார்த்து புன்னகைத்தார்.

அவள் மீசைகாரரை அப்பா என்று கூறி கையை பிடித்து மனகுமுரல்களை கண்ணீராய் வடித்தாள்.வேண்டாம் பா என்று.!


திருமணம் என்பது இருமணமும் இரு குடும்பங்களும் ஒன்றாய் இணைப்பது என்பது மாறி இருசாரரின் மனகசப்பையும் மனசங்கடத்தையும் ஈன்று வருவது காலம் காலமாக நாம் கடந்து வரும் உண்மை.


-Suganya_kk


#tamilstory #instatamil #tamilmarriagestory #storytamil #storyofatamilgirl


Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com