முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹலோ..நான் தான் யவன்..உங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல..ஏன்டா இப்டி மொக்க பண்ற.ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசனும்னே தெர்ல.இதுல எங்கிருந்து லவ் பண்றது என ஹெக்கபக்கேவென சிரித்துக்கொண்டான். மறுநொடி அவன் மனசாட்சியே அவனை ட்யூப்லைட் என்று கூறி காரிதுப்பும் கரகோஷம் அவன் காதுமடலை கிளித்தது..இதுக்கு என்ன கொழுப்பு பாத்தியா?தப்பில்ல கண்டிப்பா நான் இதுக்கு சரிபட்டு வரமாட்டேன் என்கிற தைரியம்.சரிதான் நான் சொல்ல வாயபில்ல.தூங்கி எழுந்து பிறகு யோசிக்கலாம் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு உரங்கலானான். தூக்கம் முழுதும் அவனது அடுத்த நாளின் நினைவிலேயே தொலைந்து போக வெளிச்சம் வருமுன் செய்தித்தாள் கதவின் இடைவெளி வழியே வந்துசேர்ந்ததை கவனித்தான்.. மணி ஆறு தான் ஆனால் அவன் கண்ணிற்கு மட்டும் மாலிற்க்கு செல்ல பதினைந்து நிமிடங்களே இருப்பதாய் தோன்றியது. சட்டென்று  பல சட்டைகளை மாற்றி மாற்றி கண்ணாடி முன்னின்று ஒரு குவியலை கட்டிலின் மேல் உருவாக்கிவிட்டு ஒரு வழியாக ஒரு கோப்பை  காபியின் புத்துணர்வோடு  கிளம்பிவிட்டான்.

பைக்கை எடுத்துக்கொண்டு நேராக மாலுக்குச்சென்றவன் அந்த கூட்டத்தில் கயலை தேடத்துணிந்தான். கண்ணில் அவன் தென்படவேயில்லை. இறுதியாக அவள் பேச ஏறும்போது தான் காணமுடிந்தது. அவளை முன்னின்று ஷியர்அப் செய்து கொண்டிருந்த வைஷூவை யவன் கண்டு சேகரிடம் கூறி வைஷூவை அழைத்துப் பேசினான். நான் கயலிடம் பேசனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ரண்ட் என்று கெஞ்சினான்.. ம்ம்ம் ..ஓகே ஓகே உங்கள பாத்தா நல்லவங்களா தான் தெரியுது.நான் ஹெல்ப் வேனும்னா பண்றேன்..என்னால அவகிட்ட உங்கள பத்தி பேச முடியாது.இந்த டீல் ஓகே னா சொல்லுங்க பாக்கலாம் என்றாள் வைஷூ. யோசிக்கவேயில்லை மறுகணமே ஓ.கே என்றான் யவன்.

சரி ப்ரோக்ராம் முடிஞ்சு பார்க்கிங்கல வெயிட் பண்ணுங்க என்றாள் வைஷூ. ம்ம் ஓகேங்க என்று தலையை ஆட்டினான் யவன்.

அதற்குள் கயலின் பேச்சு முடிந்தது.அவள் யதர்த்தமாக அவன் பக்கம் திரும்பினாள்.அவள் அவனை உணர்ந்தே பார்ப்பதாய் எண்ணிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கனவுகளில் சஞ்சரித்தான்.அடுத்த சில நொடிகளில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அவனை சேகர் உலுக்கினான்.கையில் அத்தனை வேகமாய் வழியில் வாங்கி வந்த அந்த பூங்கொத்தை நீட்டியபடி ஐ.லவ்.யூங்க என்றான் சேகரை பார்த்தபடி..ம்ம்ம் முத்திடுச்சு..எனக்கில்ல அவள்ட குடுக்கனும்..போய்ட்டா பாரு என்றான். அச்சச்சோ என்று வேகமாக ஓடினான்..பார்க்கிங்கில் இருவரும் சென்று பைக்கை  எடுக்கலானார்கள். வைஷுவின் பைக்கில் யான் கயலும் வந்திருந்தாள்.அவள் பேக்கில் சாவியை தேடுவதுபோல் தேடினாள்.அய்யோ சாவியை காணோம்டி.நான் எப்படி இவ்ளோ பெரிய மால்ல தேடுறது.உன் ஹாஸ்டல் வேற க்ளோஸ் பண்ணிடுவாங்கல்ல.. சரி நான் அப்பவ ஸ்பேர் கீ எடுத்துட்டு வர சொல்றேன் என்று தேடுபவாய் நடித்தாள். சேகர் வைஷூவை பார்த்து என்னமா என்னாச்சு  என்று கேட்டான்.சார் ஸ்க்கூட்டி கீ தொலஞ்சிடுச்சு சார் அதான் அப்பாக்கு கால் பண்றேன் என்றாள்.நீ ஹாஸ்டல் தான கயல்..ஆமா சார் என்றாள் கயல்.ம்ம் உப்ப ஒரு வேல பண்ணு நானும் வைஷுவும் அவங்க அப்பா வரவும் கிளம்புறோம்.நீ வெயிட் பண்ண வேண்டாம்.அந்த ப்ளாக் யமாகால இருக்குறவர் என் ப்ரண்ட் தான் பயப்படமா அவர்கூட போ அவர் ட்ராப் பண்ணிடுவார் என்றான் சேகர்.அவள் திரும்பிபார்த்தபோது அவன் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தான். சார் யார்னே தெரியாதவங்களோட எப்படி போறது என்று தயங்கி தயங்கி கேட்டாள்.அவரும் நம்ம ஷ்டாப் தான்மா என்று சேகர் கூற அப்போதும் அவள் மனம் ஒப்பவில்லை.பிறகு வைஷு யாரு சார் அவரு என்று ஏதும் தெரியாதவளாய் கேட்டாள் .அதற்கு நம்ம யவன் தான் என்று சேகர் கூறினான். வைஷூ எனக்கு தெரியும்டி போ என்று அவளை பயப்படாதே என்று கூறி பின்னிருந்து தள்ளினாள். அவளும் அரை மனதாய் அவன் பைக்கில் ஏறிக்கொண்டாள்.இருவருக்கும் இடையில் அவளது புத்தகப்பை அவர்களுக்கு இடைப்பட்ட இடைவெளியை உறுதி செய்தது.பார்க்கிங் விட்டு வெளியேறி சிறிது தூரம் சென்றதும் ஷோவென்று மழை. கையை நீட்டியபடி சாரலை முகத்தில் வாங்கியபடி மழையை ரசித்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டாள். சிறிது தூரத்தில் அந்த நெடுஞ்சாலையில் மரத்தருகில் சென்று ஒரு ஷடர்ன் ப்ரேக்.என்னாச்சு என்று கேட்டாள் கயல். எறங்குங்களேன் சொல்றேன் என்றான் யவன். அவள் கீழே இறங்கினாள். அவள் முன் மண்டியிட்டு பூங்கொத்தை நீட்டி ஐ.லவ் யூ என்றான் யவன். அவன் தன் ஹெல்மெட்டை கலட்டவே இல்லை.அவள் சிறிது நொடி அதிர்ந்திருந்தாள். நீங்க யாருனே தெரியாது..உங்க முகம் கூட நான் பார்த்ததில்ல என்று கூறி முடிக்கும் முன் காதல் முகத்தை பார்த்து வராதுன்னு நான் நம்புறேன் என்றான்.அவள் திகைத்துப்போய் வார்த்தைகள் வற்றிப்போய் நின்றாள். -சுகன்யா.கே.கே

#tamilkadhai #Tamilstory #tamilsirukathai #thodarkathai #tamilkathaigal #lovestorytamil

Recent Posts

See All

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com