முட்கள் (பகுதி-8)

நான் என்ன தப்பு செஞ்சேன்.உன்ன நேசிச்சது நான் பண்ணின மிகப்பெரிய தப்புனு நீ நெனைக்கிறியா? நீ தான் நான்னு நான் நெனச்சது தப்பா? உனக்குள்ள உனக்கான என்னோட வாழ்க்கைய உன்னோட வாழ்ந்து பார்க்க நெச்சது தப்பா?

அப்பிடின்னா, அந்த தப்பா நான் வாழ்க்கை பூரா செய்யுறதுக்கு எப்பவும் தயரா இருப்பேன்.புரிஞ்சுக்கோ கயல்.


ஏனோ என் மனசு டெல்லில இருந்து வந்தப்பரம் படபடப்பாகவே இருந்தது.

உன்ன எங்க மிஸ் பண்ணிடுவேனோனு நான் நினைக்காத நொடியே இல்ல.ஒவ்வொரு நிமிஷமும் ரணவேதனை.சாப்பாடில்ல!தூக்கமில்ல!நினைப்பு முழுவதும் உன்ன சுத்தி மட்டும் தான் இருந்தது.ஹெச்.ஓ.டி கால் பண்றவரைக்கும் என்னால உன்ன பாக்காம இருக்க முடியல கயல்.மனசுல இருக்குறது உங்கிட்ட சொல்லியே ஆகிடனும்னு ஒரு படபடப்பு அடிச்சுட்டே இருந்தது கயல்.

பாதி இராத்திரல எழுந்துப்பேன்.விடியிற வரை மட்டுமில்ல விடிஞ்சப்பரமும் கூட எப்ப உன்ன பாப்பேன்னுக்கிறத தவிர வேறு எண்ணமே இருந்ததில்ல. இந்த உலகத்த விட்டு நான் கயலுங்கிற என்னோட தனி உலகத்துக்கு பிரவேசிக்க ஆரம்பிச்சேன்.என்னோட உணர்வுகள என்னால எந்த வார்த்தையாலும் எப்போதும் பூர்த்தி செய்ய முடியாது கயல்.ஹெச்.ஓ.டி இப்போ எக்ஸாம் போய்ட்டு இருக்கு நீங்க வர்ரதுக்கு நா வேர டைம் பிக்ஸ் பண்ணி தாரேன்னு இரண்டு மூன்று கால்களையும் கட் செஞ்சுட்டார்.


உன்ன பாக்கனும்னுங்கிற என்னோட அந்த பைத்தியம் என்ன அங்க மறுபடியும் வரவச்சது.தலை கால் புரியல.நான் நிசமாவே பறக்குற மாதிரி தான் இருந்தது.உன்னோட நினைவுலயே மிதந்துட்டு இருந்தேன்.


ஒரு வேலையா டெல்லி வந்தேன் அப்படியே உங்ககிட்ட செமினார் டேட் என்னாச்சுனு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்; என்று தனக்குத்தானே ஓயாது பாட்டு பாடி ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான்.

விமானத்தில் இருந்து நேராக இறங்கிய அவன் அந்த கல்லூரிக்கே நேராகச் சென்றான்.


அன்று வெள்ளிக்கிழமை.அந்த கல்லூரி வழக்கப்படி வெள்ளிக்கிழமைகள் தோறும் அசெம்ப்லி அமைத்து நாடு, சமுதாயம்,தொழில்நுட்பம்,இன்றைய சூழல் போன்ற பல தலைப்புகளில் வாக்குவாதங்களும் விவாதங்களும் நடக்கும்.


அந்த கூட்டத்தோடு கூட்டமாய் அவனும் கலந்து கயலின் வகுப்பறை மாணவர்கள் இருக்கும் இடத்தை சரணாகதி அடைந்தான்.அந்த சாரை சாரையாய் அமர்ந்திருந்த கூட்டத்தில் அவளை எங்குப் காணவில்லை.வைஷூ மட்டும் சில மணித்துளி கடந்த பின் அவன் கண்களுக்கு அகப்பட்டாள்.


அங்கிருந்த மாணவர்களிடம் நட்புணர்வோடு கதை பேசிக்கொண்டே மெல்ல அங்கிருந்த புரோபசர் ஒருவரிடம் சென்று அமர்ந்து கொண்டான் யவன்.


ஹாய் சார்! நான் யவன் ஹெஸ்ட் லெக்சரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உடம்பில் அங்காங்கே கம்பிளி பூச்சி ஊர்பவன் போல நெளிந்தபடி எதிரிருப்பவன் மறுமொழிக்காய் காத்திருந்தான்.


மேலும் கிழும் பார்த்தவன்;யா சார் ! ஹலோ நான் சேகர்.கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட் ஸ்டாப் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு யவனை அருகே இருந்த காலி நாற்காலியில் அமரும்படி தலையை ஆட்டி சைகை செய்தான்.


அவனும் அருகில் அமர்ந்து கொண்டான். சிறிது நேரம் ஆனது அவனுக்கு அந்த சூழலில் தன்னை அங்கமாக்கி கொள்ள.பின் சிறிது கம்போர்ட்டபுளாக உணர்ந்ததும் யவன் பேச்சை தொடங்கினான்.ஆமா சார் இவங்கலாம் எந்த டிபாட்மெண்ட் என்றான் வைஷு இருந்த கும்பலை நோக்கி தன் தலையை நீட்டியபடி யவன்.


என்ன சார்?இவங்களாம் ஆர்கிடெக்ட் என்றபடி கரத்த குரலில் அந்த மைக் எதிரொலியை எஞ்ச மறுமொழி வந்தது.


எதார்த்தமாய் அவனை பார்த்த வைஷூ தன் தலையை கவிழ்த்திக்கொண்டாள்.இது அதுல்ல?! ஐய்யய்யோ வசமா மாட்டிக்கிட்டேனே..இந்த கயல் வேற தனியா விட்டுட்டு போய்ட்டாளே .இப்போ எப்படி சோலோவா எஸ்கேப் ஆகுறது என தன் தலையில் துப்பட்டாவை வைத்து முகத்தை மூடிக்கொண்டாள் வைஷு.


வைஷூவை சுற்றி இருந்தவர்கள் என்ன லூசே என்பது போல் பார்க்க அசட்டு சிரிப்புடன் வெய்யில் தோய்ந்த மாலையில் என்னா வெயிலு என்று மேலும் சிரிப்பை மூட்டிவிட்டிருந்தாள்.


யவனின் கண்கள் மட்டும் என்னவோ கயலை மட்டும் தேடித்தேடி கலைத்தன.


சார் நாளைக்கு எக்ஸிபிஷன் தேகரா மாலில் ;இதுல செயிக்கிற ஸ்டூடன்ஸ்க்கும் சொல்லிருவோம் வரிங்களா 9.30க்கு என்றான் சேகர்.இல்ல சார் நாளைக்கு கிளம்பனும் என கயலை காணாமல் சோர்ந்து போனான்.


ஓ.கே சார் நோ ப்ராப்ளம்.நாங்க எல்லோரும் போலாம்னு இருக்கோம் அதான் கேட்டேன் என்றான் சேகர்.


அப்போது அந்த அறிவிப்பு நிகழ்ந்தது.ஐ இன்வைட் மிஸ் கயல் ப்ரம் ஆர்கிடெக்ட் டிபாட்மெண்ட் டூ கண்வே ஹெர் ஸ்பீச் ஆன் தி டாபிக் "எம்பவரிங் யூத்ஸ் ஆப் இந்தியா".

பலத்த கரகோஷத்துடன் வெள்ளை நிற அதிகாரம் செய்யும் தோணியில் புடவையுடன் வந்து மேடை ஏறி நின்றாள் கயல்.


அவளை கண்ட யவனின் மயிர் கால்கள் உடலெங்கும் சிலிர்த்துக்கொண்டன...!அவன் உடலெங்கும் சந்தோஷக் காற்று பரவிக்கொண்டிருந்தது.


கைதட்டல் சத்தம் அவன் காதுகளை கிழித்துக்கொண்டிருந்தது.

அவள் என்ன பேசப்போகிறாள் என்பதில் மற்றவர்களை அவன் மிகவும் ஆர்வமாக இருந்தான்.ஒரு புழுவை போல மூச்சுவிடுவது கூட வெளியில் தெரியாமல் இருந்தவள் எப்படி பேசப்போகிறாள் என்ன பேசப்போகிறாள் என்று சற்று ஏளனமாகத்தான் அவனும் வீற்றிருந்தான்.


கால்களை சற்றே முன்னே நீட்டியபடி ஆசுவாசமாய் அமர்ந்திருந்தான் யவன்.

புரிதலுக்காக தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.

தோழமைகளே!இங்கு யாருக்கும் அறிவுரை கூறும் அளவிற்கு நான் இன்னும் வளர்ந்துவிடவில்லை என்றே நான் நினைக்கிறேன்.இருந்தபோதிலும் நான் கடந்து வந்த பாதையை மாத்திரம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த மேடை ஒரு அற்புதமான இடமாக நான் உணர்கிறேன்.

என் ஊர் மிகவும் பின்தங்கிய ஒரு மலைக் கிராமம் தான்.எனது ஊரில் முதன்முதலில் 45 கி.மீ மிதிவண்டி பயணத்தில் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்த முதல் பெண் நான் என்பதில் பெருமிதமும் என் பெற்றோரை எண்ணி கர்வமும் கொள்கிறேன்.

பி.ஐ.டி இன்ஸ்ட்யூடஸன்ஸ் நிறைய பேருக்கு கனவு.என்னோடதும் கூட.அப்படி என் கிராமத்தோட முதல் பட்டதாரி ஆகனுங்கிற என்னோட கனவுகளுக்கான அப்ளிகேஷன் நான் சப்மிட் பண்ணேன்.

இரண்டு மாதத்திற்கு பிறகு என்னை கல்லூரி ஜாய்ன் பண்ண சொல்லி அழைப்பு வந்தது.நான் செலக்ட் பண்ணிணதுல மேஜர் மட்டுமில்ல.எல்லாமே ஆங்கிலத்தில் படிக்கவேண்டிய சூழல்.முதலில் சற்று தடுமாற்றம் தான் ஆனாலும் அதற்கான தனி வகுப்புகள் சென்றேன்.மிகுந்த சிரத்தை என்றாலும் என்னை உயர்த்திகொள்ள எப்போதும் தயங்கியதில்லை.என்னை போலவே ஸ்காலர்ஷிப்பில் படிக்கவந்தவர்கள் நிறைய பேர் இதே கூட்டத்தில் இருப்பீர்கள்.நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று மட்டும் தான்.உங்கள் உழைப்பை மட்டும் முன்வையுங்கள்.உங்களை உயரத்திற்கு அழைத்துச்செல்லும் வழியில் உதவ இங்கு நிறைய சகோதர சகோதரிகள் நட்புகள் வழிதோறும் காத்திருக்கின்றன ; இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.இன்று ஒரு ஆங்கிலம் பேசும் உலகாவிய பெரிய நிறுவனம் என்னை எக்ஸ்க்யூட்வ் ஜென்றலாக அழைத்திருப்பது எனது உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன்.இதை போலவே உங்கள் அனைவராலும் மிகப்பெரிய உச்சத்தை அடைய முடியும்.இவ்வாறாக அவள் தனது உரையை முடிக்கும் வரை கரகோஷங்கள் நிற்காமல் பொழிந்தது.

யவன் வாயடைத்துப்போனான்.கயல் தனது உரையை முடிக்க அப்போ நம்மலும் நாளைக்கு மாலுக்கு போலாம் போலயே என்று சொல்லியவாறே சேகரை பார்த்தான்.சேகர் யலனை பார்த்து சிரித்துக்கொண்டான்.மேடையை மறுபடி பார்க்கும்போது கயல் அங்கு இல்லை.சுதாரித்து வைஷுவை தேடினான்.வைஷுவும் எஸ்கேப்.நாளைக்கு பாக்கலாம் என்று கூறியபடி கயலைதேடி மேடை பின்புறம் சென்றான்.அவன் அங்கு அனுமதிக்கப்படவில்லை.ஷிஇட் என்று தன் கையை அருகில் இருந்த நாள்காலியில் குத்திக்கொண்டு அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தான் யவன்.


-suganyakk


#tamilstories #tamil #tamilpoem #tamilbooks #srilanka #tamilbookstore #venpaabookhouse #tamilnovel #bookstore #venpaa #colombo #jaffna #love #tamillove #lovestory #tamilwriter #tamilromance #maaneetians #ghsp #geetmaansinghkhurana #hotnesspersonified #hotnessoverload #geethanda #hottestcouple #bestcouple #maaneet #geethuisabseparayi #maan #gurti #bhfypRecent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com