முட்கள்(பகுதி-7)

கிளவியை காட்டி நக்கல் செய்துகொண்டிருந்த அவனது நண்பர்களை தள்ளுங்கடா என்று மிக காரசாரமாய் விரட்டி எழுந்து அவளை தேடுவதில் துரிதம் காட்டினான் யவன்.


தன்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற அவளின் பார்வை சாரலில் அவன் நனைந்து எழுவதற்குள் கனபொழுதில் மறைந்து போனாள் கயல்.


அவன் அவளை சிறிது நேரம் எல்லா இடங்களிலும் தேடிவிட்டு அவன் நண்பர்களின் கேலி கிண்டல்களை சமாளித்து அவ்விடத்தை விட்டு அவளை தேடிக்கொண்டே நடக்கத்துவங்கினான்.


டேய்.டேய் என்று கத்திக்கொண்டே அவன்.பின்னால் மனோவும் கதிரும் சென்றனர்.


அவன் அவளைத்தேடி ஹெச்.ஓ.டி அறை வரை மீண்டும் சென்று ஆரம்பப்புள்ளிளியில் தேடல் முடிந்தது. அவன் கயலை கடைசிவரை அன்று பார்க்கமுடியாமல் போனது.


ம்ச்ச்..மிஸ் பண்ணிட்டேனே என்று அவன் புலம்பிக்கொண்டிருக்க அவன் பின்னால் வந்த ஹெச்.ஓ.டி யவனை நோக்கி; எங்க போனிங்க யவன் உங்கள காணோம்னு நானே அங்கிருந்து கிளம்பிட்டேன்.நீங்க என்னனா இங்கயே இருக்கீங்க என்று

கேட்கவே..திருதிருவென விழித்தவன் இல்லசார் ப்ரண்ட்ஸோட காபி சாப்பிட்டு வரலாம்னு போனேன் சார் என்று யவன் சமாளிக்க அப்போது அங்கு வந்த கதிர் என்னடா பாத்தியா என்று கேட்க என்ன சார் என்று முன்னோக்கி சென்றுகொண்டே ஹெச்.ஓ.டி கேட்க;யவன் அவன் காலை மிதித்த நொடியில் கதிர் அப்மா என்று கதற மனோ அவன் வாயை மூடிவிட்டான்.


இல்ல சார் உங்கள பாத்துட்டேனானு கேக்குறான் என்று ஹெச்.ஓ.டியிடம் யவன் மழுப்ப மற்ற இருவரும் ஆம சாமிப்போல் தன் தலையை அசைத்தனர்.

ஹெச்.ஓ.டி திரும்பவதை பார்த்த மனோ கதிர் வாயிலிருந்து தன் கையை விலக்கினான்.


எல்லாம் சாதரணமாக இருப்பதை போல் நடித்த அவர்கள் மூவரும் பூம்பூம் மாடுகளை போல தலையசைத்து கொண்டே இருந்தனர்.


சிரித்தபடி வாங்க போலாம் என்று உள்ளே அழைத்துச்சென்றார் ஹெச்.ஓ.டி.


ஒரு லீவ் டே பார்த்து அந்த டிபார்ட்மெண்ட்பசங்கள வரச்சொல்லி செமின்ர் பினிஷ் பண்ணிடலாமா யவன் என்று ஹெச்.ஓ.டி வினவினார்.


என்ன மாமு இவரே உன் லவ்வுக்கே சமாதி கட்டிடுவாறு போல...உன் அம்மா அப்பா சொந்தபந்தம் அந்த பொண்ணு வீடு விதி இப்பிடி எதுவுமே தேவையில்ல போல என வாயைப் மூடிக்கொண்டு கதிர் சிரிக்க; அந்த பொண்ணு வேற டிபார்ட்மெண்ட்னா ஒரு ஒர்கிங் டே வே ஓ.கே னு சொல்லு மச்சினு மனோ அவளை முன்னோக்கி தள்ள.. சொல்றியா நாங்க சொல்லவா என இருவரும் முறைத்தனர்.


நானே சொல்றேன் என்று இல்ல சார் வீக்டேஸ் நான் ஊருக்கு போகனும்.ஷோ நீங்க எனக்கு வீக்டேஸ் கொடுத்தா ரொம்ப நல்லாருக்கும் என்றான் யவன்.


ஓ.கே உங்களுக்கு ப்ராப்ளம் இல்லேனா ஓ.கே. நான் டிசைட் பண்ணிட்டு கால் பண்றேன் என்றபடி ஹெச்.ஓ.டி முடித்தார்.


சரி சார் என்றபடி யவன் அங்கிருந்து கிளம்பினான்.


அவன் ப்ளைட்டுக்கு டைம் ஆகிவிட்டதால் இங்கதாண்ட இருப்பா நெக்ஸ்ட்டைம் பாத்துக்கலாம் என்று அவனை இழுத்துச்சென்றனர்.


அவர்கள் அனைவரும் காரில் சென்று ஏறிக்கொண்டனர்.அந்த சமயத்தில் யவனின் அம்மா அவனுக்கு போன் செய்ய அவன் அந்த தொலைபேசி இணைப்பில் இணைந்து மூழ்கியபடி பின்னிருக்கையில் சாய்ந்து கண்மூடி கிடந்தான்.

சரியாக கல்லூரியில் மாணவர்களும் வகுப்பறை விட்டு கலைந்து சாரைசாரையாய் சென்றவண்ணம் இருந்தனர்.


கயலும் அவன் காரை கடந்து செல்ல எதிரே வந்த இன்னொரு மாணவி கயலின் கையிலிருந்த வாட்டர்பாட்டிலை தட்டிவிட்டாள்.

கையை அசைத்து கயல் வண்டியை நிறுத்தும்படி கூற ம்ச்ச் கொட்டிய மனோ இதுங்கவேற சீக்கிரம் என்றபடி உள்ளிருந்து கையசைத்தான்.


சாரிண்ணா என்றபடி குனிந்து தனது வாட்டர் பாட்டிலை எடுத்த நொடியில் தொடர்பில் இருந்தபடியே என்னாச்சு என்றபடி கையசைத்தான் யவன்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்த நொடியில் அவள் தனது வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அவர்களை கடந்து சென்றாள் கயல்.


யவனின் காரும் அங்கிருந்தது பறந்தது.


அன்றைய இரவு அவளின் தூக்கத்தை தூக்கிச்சென்றுவிட்டது.யவனுக்கும் ப்ளைட்டில் இதே நிலைமை தான்.


நம்மள கேண்டின் வர பாலோ பண்ணது யாரு என்று கயலும் மறுபடி அவள எப்போ பார்ப்பேன் என யவனும் யோசனையில் மூழ்கி இருந்தனர்.


அவர்கள் எதிர்பார்த்த அந்த மூன்றாம் சந்திப்பும் நிகழ்ந்தது.


-suganya_kk

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com