முட்கள்(பகுதி-6)

அன்றலர்ந்த அந்த மல்லிகை போன்ற அவள் முகத்தையும்,அதில் பளிங்கு கற்கள் போன்ற அவள் கண்களையும்,தேனில் தோய்த்த இரு ரோஜா இதழ் போன்ற அந்த உதடுகளும் அச்சில் வார்த்து எடுத்தது போல் இருத்த அவள் மூக்கும் அத்தனை கொள்ளை அழகாய் செய்கையில் வித்தைக்காட்டிக்கொண்டிருந்தன..அவள் கதை பேசிக்கொண்டிருந்த அந்த நொடிகளில்.அத்தனை அழகையும் ஒரு சேரக்கண்டு அவன் தன்னை மறந்திருந்த பொழுது அவளின் நீண்ட கூந்தலருவி அவள் இன்முகத்தை மறைப்பதும் அதற்கு யவன் மனம் கூந்தலை கடிந்து கொண்டும்;முகம் சினுங்கி கொண்டும் இருக்க ,இடையில் அவளது வெண்ணிற மோதிரம் அணிந்திருந்த ஆள்காட்டி விரல் நகம் மெதுவாய் அவன் கடுகடுப்பு அறிந்து அந்த கூந்தல் ஒதுக்கையில் விரல்களுக்கு அவன் நன்றி கூறுவதைக் கண்டு அவள் இதழ் புன்னகைப்பதை போலவே அந்த நொடிகள் அத்தனை அழகாய் நகர்ந்து அவன் வாழ்விற்கு அழியா நினைவுகளை அள்ளித்தந்தன.


அப்போது கயல்;ஆமா,ஏன்டி இப்படி இத்தனை மேத்ஸ் பேப்பர்ஸ்?யார் கேட்ட இவனுங்கள?இதுக்கும் நாம படிக்கிற துறைக்கும் ஏதாச்சும் சம்மந்தமிருக்கா?இத்தன பேப்பர கண்டுபிடிச்சவன கூட சும்மா விட்ரலாம்.ஆன நம்ம உட்கார வெச்சி நடத்துறேன்னு தாலாட்டரவங்களையும்; டெஸ்ட் எழுதச்சொல்வரங்களையும் என்ன டி பண்றது? என்று செம கடுப்பாய் போர்க்கை கையில் எடுத்து சமோசாவை பதம் பார்த்தாள்.


ஹ்ம்ம்... இவ என்னோட சமோசாவ கொண்ணுட்டா என்றபடி சினுங்கி கொண்டாள் வைஷு.நாக்கை வெளியே நீட்டியபடி செரி செரி விடு பீட்ரூட்டு சின்னப்புள்ளத்தனமா இதுக்கு போய் அழுதுகிட்டு வேற வாங்கித்தாரேன் என்றபடி நைசாக சமாளித்தாள்.


உன்ன யாருடி படிக்க சொன்னா என்ன மாதிரி படிக்காமலே இருக்க வேண்டியது தான என்று ஹோ என கூச்சலிட்டாள் வைஷூ. அசிங்கப்படுத்தாத வைஷூ எல்லாரும் நம்மளயே பார்க்குறாங்க என்று முனுமுனுத்துக்கொண்டாள்.


நம்மள இல்ல உன்ன தான் உன்ன மட்டும் தான் அந்த ஒய்ட் சர்ட் பார்த்துட்டே இருக்கான்.அதுவும் கைய கண்ணத்துல வெச்சுட்டு ஈஈஈனு பல்ல காமிச்சுட்டு ஒரு ஒருமணிநேரமா உன்ன மட்டும்தான் பார்த்துட்டு இருக்கான்.


இவன பாக்குறதுக்குத்தான் என்ன தலைவலி வாமிட் வருவதுனு அடுக்கடுக்கா புழுகுமூட்ட மாதிரி புழுகி என்ன கூட்டிட்டு வந்தியா? பரவாயில்ல ஆள் நல்லாத்தான் இருக்கான்.கருப்பா பவுடர் மூஞ்சியா இருந்தாலும்;க்யூட்டா.. அஞ்சடி இருப்பான் போலயே..? என்று அழுகையை நிறுத்தி அவனை பற்றி அடுக்கிக்கொண்டே போனாள்...!


ச்சி லூசு ஏன் உலர்ற ?அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..யாரதுன்னு திரும்பிப்பார்த்தாள் கயல்..ஆனால் அவளுக்கும் யாரும் தெரியவில்லை.எங்கடி?என்றபடி வைஷூவிடம் கேட்க அங்க பாரு என்று அவள் கையை நீட்ட யவன் முகம் தெரியா வண்ணம் அந்தி சாயும்பொழுதின் பொன்மஞ்ச நிற கதிரவன் கதிர்கள் அவன் முகத்தை மறைத்திருந்தது.


அங்க ஆள் இருக்குங்கிறத தவிர எனக்கு ஒன்னுமே தெர்ல..உனக்கு மட்டும் எப்படி டி இவ்ளோ டீடெய்ல்ஸ் தெரியுது..விட்டா வீட்டு அட்ரெஸே குடுப்ப போல ..நீ சமோசா சாப்டது போதும் எழுந்து வா என்றாள் கயல்.


பேபி அவன் உன்ன ஹெச்ஓடி ரூம்ல இருந்தே பாலோ பண்றான்.நான் அப்போவே பார்த்தேன்.இரு டி போலாம் என்றாள் வைஷூ.


என்ன அப்போவே பாத்தியா? அப்போ ஏன் சொல்லல எரும என்று அவளை கண்களை சுருக்கி சற்று அருகில் சென்று வினாவினாள் கயல்.


கன்பார்ம் பண்ணிக்க தான்.நீ வேற ஓய்ட் ட்ரஸ் போட்ருக்கியா?அவனும் ஒய்ட் ட்ரஸ் போட்டுருந்தானா? நீ என்ட சொல்லல போலன்னு கன்பார்ம் பண்ண கேட்காம இருந்தேன்டி..!அப்போ நீ வர சொல்லலையா அவன? ஹய்யய்யோ என்று கையை உதறிக்கொண்டாள் வைஷூ.


வா கிளம்பலாம் என்று வைஷூவின் கையை பிடித்து இழுத்தாள்.ஹே ஆளு செம ஹேண்ட்சம்மா இருக்காண்டி உனக்கு தெரியுமானு பார்த்துட்டு போலாம்னு வைஷூ கூற... அதை கண்டுகொள்ளாமல் அவளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள் கயல்.

அதே சமயத்தில் அவள் எழுந்து செல்வதை மறைக்கும் வண்ணம் யவனின் நண்பர்கள் அவனை அவள் பார்வையை மறைக்கும் வண்ணம் அமர்ந்து கொண்டனர்.


என்னடா விபூதில்லாம் போட்டாச்சா?இல்ல நம்பூதிரி யாரயாச்சும் பாக்கனுமா? என்றான் கதிர்.


ம்ம்ம்...இன்னும் அப்பாய்ண்மெண்டே வாங்கல..இவனுங்க வேற..என்றான் யவன்.


ஆமாண்டா எங்கடா உன் தேவத எங்களுக்குலாம் காட்டமாட்டியா? என்று மனோ நச்சரிக்கவே..ம்ம்ம் இதோ உண்மையாவே அவள் ஏஞ்சல் தாண்டா நகரு என்று கதிரை நகர்த்தி கைகளை நீட்ட முன்னால் அங்கே பெருக்கும் பாட்டி நின்றுகொண்டிருக்க யவனை பார்த்து கொல்லென அனைவரும் சிரித்தனர்.


அவள் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே வைஷு கையை இழுத்தபடி நடந்து கொண்டிருந்தாள்.


--suganya_kk


கதை பிடித்திருந்தால் பிடித்தவர்களோடு பகிருங்குள்.

Subscribe for instant story updates

இந்த பகுதி எப்படி இருந்தது என்பதை கமெண்ட் செக்சனில் பதிவிடுங்கள்.

மேலும் இதை போன்ற கதைகளின் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.

#lovestorytamil #tamilkadhalkathai #kathalkathai #lovestory #tamillove

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com