முட்கள்(பகுதி-5)

இருபது நாட்களுக்கு பிறகு,ரிப்போர்ட் பண்ணிட்டு வேற டேட் செமினார்க்கு பிக்ஸ் பண்ணிக்கலாம்னு கேட்க வந்தேன்.


பி.ஐ.டி இன்ஸ்ட்டியூசன்ஸ். டெல்லிலயே மிகப்பெரிய இன்ஸ்ட்டியூட்.உனக்கு தான் தெரிஞ்சிருக்குமே நீ படிச்ச அது கிட்டத்தட்ட ஒரு ஊர் அளவு பெரிய இன்ஸ்டியூட்ன்னு.அங்க இல்லாத காலேச்சும் இல்ல ஸ்கூல்ஸ்சும் இல்ல.அந்த கடல் மாதிரி கூட்டத்தில் கூட நீ மட்டும் என் கண்ணு முன்ன தனியா தெரிஞ்சது தான் எனக்கு இன்னும் கூட கனவு மாதிரி தோனுது.


மெயின் ஆபிஸ் போக ரொம்ப தூரம் என்பதால் யவன் தனது நண்பர்களுடன் காரில் வந்திருந்தான்.


அங்கு சென்று விசாரித்து அவன் செமினார் குறித்து பேச அந்த துரை ஹெச்.ஓ.டி யை பார்க்க மாடிப்படிகளின் வழியே ஒன்றாம் தளத்திற்கு சென்று கொண்டிருந்தான்.


அவர் நூலகத்தில் இருப்பதை அறிந்து வெளியே வந்தான் யவன்.

அங்கு கிட்டத்தட்ட 25 க்கும் மேற்ப்பட்ட நூலகங்கள் ஒவ்வொரு துறைக்கும் சிறப்பாக வழிநடத்தப்பட்டிருந்தது.


ஹெச்.ஓ.டி சார் பொது நூலகத்தில் தான் இருக்கிறார்.நான் அலைபேசியில் தொடர்புகொண்டேன்.உங்களை அங்கே வரும்படி கூற சொன்னார்.


வர்றேன் சார் என்று அவன் நடையைக்கட்டினான்.

எப்படி போகனும் பிரதர் என்று யவன் கிளம்பியவரை கேட்கவே;வெளியில் மேப் இருக்கும் பாருங்க சார் என்ற பதில் மொழியைக் கூறி வெளியே சென்றான்.


அங்கு வெளியே இருந்த வரைபடத்தை உற்று பார்த்துவிட்டு ம்ம்ம் வழியை பார்த்துட்டேன்னு சொல்லி மொபைலில் ஒரு கிளிக் செய்தான் யவன்.அங்கிருந்த மற்றொரு பயிற்றுவிப்பாளரிடம் வர்றேன் சார் அப்பறம் பாக்கலாம் என்று கூறி கையசைத்தப்படி தலையசைத்து கண்ணால் செய்கை செய்தான் ; அவன் முடித்த வேகத்தில் ஒரு பெண் எங்க போற? என்ன விட்டுட்டு போய்டுவியா?என்னையும் கூட்டிட்டு போ ஸ்டுப்பிட்! இவ்ளோ வேகமா எங்க கிளம்புற நில்லு வைஷூ என்று இன்னொரு பெண்ணின் பின்னாலேயே ஓடிச்சென்று அவனருகில் வருவதை போல் வந்து அவனை கடந்து ஓடினாள்.


அவளை பார்த்ததும் அவனுக்குள் அத்தனை பேரானந்தம். ஆமாம்,அவனையே சரமாரியாக கேள்வியெழுப்புவதை போன்ற அந்த பிரம்மையை அவனுக்கு விளைவித்தது வேறு யாரும் இல்லை கயல் தான் அது.அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.தன்னை தானே கிள்ளிக்கொண்டு கனவா இல்லை நனவா என பிரம்மித்து நின்றான். ஒரு சில வினாடிக்கு பிறகு திகைப்பில் இருந்து வெளிவந்தவனாய் அவள் எங்கே என தேடினான்.அந்த வெள்ளை சுடிதார் அணிந்திருந்த அவனது தேவதை பேச்சில் மும்மரம் காட்டியபடி; அங்கிருந்த படிகளின் வழியே இறங்கிக்கொண்டிருந்த

அவளை பின்தொடர்ந்தபடியே சென்றான் யவன்.


கயலும் வைஷூவும் நேராக கேண்டீனுக்குள் நுழைந்தனர்.அண்ணா ,சூப்பரா ஒரு காபி என்றாள் கயல்.உனக்கு ?? என்றபடி இருமுறை தனது அழகாக செதுக்கியதை போல் இருந்த அந்த இரண்டு புருவங்களையும் உயர்த்தி கேட்டாள்.


ஹ்ம்ம்...எனக்கு ஒரு டைரிமில்க் ஒரு சமோசா என்றாள் வைஷு.


அண்ணா ட்ரீட் இந்த மேடம் தான் தராங்க.. சோ டைரிமில்க் பெருசு இரண்டு அண்ட் ஒரு சமோசா என்றாள் கயல்.


மேசையில் தட்டி ஹிந்தி பாட்டு ஒன்றுக்கு தாளம் போட்டுக்கொண்டு இருந்தாள் கயல்.வைஷுவிடம் ஒரே ரகலை செய்துகொண்டிருந்தாள். ம்ம்ம் .


ஹே..போடி கலாய்ச்சதெல்லாம் போதும் போய் அந்த சாங்க மாத்து எப்போ பாரு ஒரே ஹிந்தி சாங்க் தான் ஓடுது.செம கடுப்பாகுது.சன் மியூசிக் வைடி..நம்பர் 502 என்றாள்.


அனைத்தையும் கவனித்துவிட்டு உள்ளே நுழைந்தவன் கயலுக்கு எதிர்புறமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.


அவளிடம் சென்று பேசலாம் நன்றி சொல்லலாம் என்று நினைக்காமல் இல்லை.ஆனால் எல்லோரையும் கேலி செய்த அவனுக்கும் அந்த சூழ்நிலை முதல்முதலாய் நிகழ்ந்தது.

அவளை பார்த்ததும் அவனுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு.ஒரு ஸ்பார்க் அவனுக்குள்ள வந்தத அவன் உணர்ந்தான்.அவளை பார்ப்பதிலேயே லயித்திருந்தான்.


அவனுக்கு அது காதலானு சரியாக புரியாவிடிலும் அவன் அந்த உணர்வை மதித்து மகிழ்ந்தான்.

அவன் உடன் வந்த நண்பர்களுக்கு கால் செஞ்சு மச்சி லொகேஷன் ஷேர் பண்றேன் அங்க வந்துடு காபி குடிச்சுட்டு ஹெச்.ஓ.டி யை அப்பறம் போய் பார்க்கலாம் என்றான் யவன்.


டேய் ஆல்ரெடி ப்ளைட்டுக்கு உனக்கு லேட்டாச்சு வெலாடாமா வாடா என்று அவனை அழைத்தனர்.


ப்ளைட் மிஸ் ஆன பரவால்ல மச்சி என் லைப்பே இங்க தான் வெயிட் பண்ணுது வாடா என்று சொல்லி காலை கட் செய்தான்.


டேய் டேய் என்று கத்திவிட்டு ;போன வெச்சுட்டான் மச்சி.அந்த லோகேஷன பாரு . இதோட வந்தது பெரிய தப்பா போச்சு இனி இவன் சங்கத்தாமே கூடாதுடா சாமி.

எங்க போறோம்டா என்று மற்றொரு நண்பன் கேட்க; ஏன் அவனுக்கு பேய் புடுச்சிருச்சாம் வெறட்டப் போறோம் என்றான் மனோ.


கயல் சானலை 502 ல் வைத்து விட்டு அவனிடமிருந்து மறைந்தபடி அமர்ந்து கொண்டாள்.. வைஷுவுடன் கதை பேசுவதில் அவள் மூழ்கியிருக்க மூணு காபி என்று ஆர்டர் கொடுத்துவிட்டு யவனும் நகர்ந்து கயலை பார்க்கும்படியாக நாற்காலி சற்று நகர்த்தி இடம் மாற்றி அவளது அந்த பௌணர்மி முகத்தின் பிரகாசம் பளிச்சென படும்படியாக அமர்ந்து அவள் பார்வையிலேயே மூழ்கிவிட்டான்.


அவள் கை அசைவுகளும் கண் அசைவுகளும் அவனுக்கு மட்டும்.ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டு இருந்தது.தன்னைத்தானே எண்ணி நானா இது என்று நினைத்து அவன் நகைத்துக்கொண்டான்.


அப்போது சரியாக வி.ஜே அந்த பாட்டை ஒரு சூப்பரான சாங்க் வந்துட்டே இருக்கு... ஸ்டே ட்யூன்டு அண்ட் என்சாய் என அவர் முடிக்க ஒளிப்பரப்பானது அந்த பாடல்.


என்ன மனுசன் சாமி இவர்.எவ்வளவு அழகான ஆழமான வரிகள்.யவன் மெய்மறந்து போனான்.

வேறு யார் நிச்சயமாக அது வேறு யாராகவும் இருந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.இயற்கையோடு இணைந்த நா.முத்துகுமாரின் அருமையான வரிகள் தான் அவை.


அப்போது யவனுக்காகவே எழுதியிருப்பதாய் உணர்ந்து உணர்ந்து அதன் அத்தனை வரிகளும் முதல் முதலாய் அர்த்தம் பயிற்றுவித்தன.களிப்பு அவனிடத்தில் எல்லையற்று கறைபுறண்டோடியது.

பாடல்கள் கேட்கவே நாட்டமில்லாத அவனுக்கு அந்த வரிகளின் அர்த்தங்கள் நன்கு விளங்கிற்று ; பித்தாகிப்போனான்.


"கதைகளை பேசும் விழியருகில்....எதை நான் பேச என்னுயிரே.... காதல் சுடுதே ....காய்ச்சல் வருதே"!

என்ற அந்த பாடலில் மூழ்கி அவளை கண்கொட்டாமல் பார்த்தபடி சுற்றி இருக்கும் உலகம் மறந்து அவளும் அவனும் மட்டும் ஆதாமும் ஏவளுமாய் இருப்பதாய் எண்ணி அதில் திளைத்திருந்தான்.-suganya_kk


கதை பிடித்திருந்தால் பிடித்தவர்களோடு பகிருங்குள்.


Subscribe for instant story updates


உங்களை இதை போல் மெய்மறக்க செய்த பாடலை பற்றிஸகமெண்டில் குறிப்பிடுங்கள்.

இந்த பாடலையும் கவிஞர் நா.முத்துக்குமார் பற்றிய உங்கள் கருத்துக்களையும் அவரின் பாடலில் உங்கள் பேவேரேட்டையும் கமெண்டில் பதிவேற்றுங்கள்.

#lovestorytamil #tamilkadhalkathai #kathalkathai #lovestory #tamillove


Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com