முட்கள்(பகுதி -4)

மழை சோ வென்று கொட்ட தொடங்கிற்று..!

வலிகளை தனது மனதில் தேக்கி வைத்திருந்தவனாய் பேசத் துவச்கினான் யவன்.


எப்பவாச்சும், நம்ம வாழ்க்க அவ்ளோதான்னு நினைக்கிற சூழ்நிலை எல்லாரும் கடந்து வந்திருந்போம்..!

ஆனால் என்னோட வாழ்க்க முடியுற தருணமும் ஆரம்பிக்கிற தருணமும் ஒன்னாவே அமஞ்சது கயல்.


2019 ஏப்ரல் 26 அன்னிக்கு நீ எங்க இருந்தேனு உனக்கு ஞாபகம் இருக்கா? கண்டிப்பா மறந்திருப்ப என்றபடி எழுந்து அவன் திரும்பியபடி நின்றான்.அன்னிக்கு, நீ என்ன பண்ணிணியோ அது தான் நான் இன்னிக்கு உன் முன்னாடி நிக்க காரணம்.


நான் ஒரு செமினார்க்காக டெல்லி வந்தேன்.விமானத்தில் இருந்து இறங்கினதுமே என் பெயர்பலகையோடு என்னை அழைத்துச் செல்ல ஒருவரை அனுப்பி வைத்திருந்தார்கள்.

அவரிடம் வண்டியை பெற்றுக்கொண்டு எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதியின் சாவியையும் பெற்றுக்கொண்டு சில வேலைகள் இருக்கிறது;அதை முடித்துக்கொண்டு நான் நேராக கல்லூரிக்கே வந்துவிடுகிறேன் என்று கூறி அனுப்பிவைத்துவிட்டேன்.


நான் உன்ன பாக்கனும்னுங்கிறது கடவுள் எடுத்த முடிவு கயல்.நான் கவனமா வந்தப்போ கூட ஒரு பெரிய விபத்துக்குள்ளானேன்.


நான் என் குருதியிலேயே குளித்திருந்தேன் எனலாம்.என்னால் என் கண்களை திறக்க கூட முடியலை கயல்.

என்னை கடந்து சென்ற யாவரும் கண்டும் காணததைப் போல் சென்ற வண்ணமே இருந்தனர். இருதய துடிப்பும் குறைந்து கொண டே போனது.

எங்ஙனம் நான் பிழைப்பேன்,என் வாழ்க்கை முடிந்தது என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில் தான் கடவுள் உன்னை ; என் தேவதையை என்னிடம் அனுப்பி வைத்தார்.


நீயும் பேசாம போய்ருக்கலாம்ல!உனக்கேன் என் மேல் அத்தனை கரிசனம்?

எதுக்குடி என்ன காப்பாத்தின?என்று உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்த அவனை கண்டு திகைத்திருந்த அவளிடம் மன்னிச்சுடு கயல்..ஏதோ ஆதங்கத்தில் பேசிட்டேன்.


இரத்தம் தோய்ந்திருந்த என் முகம் உனக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!

யவன் கூறியதை உற்றுக் கேட்டுக்கோண்டிருந்த அவள், அது நீயா என்பது போல் தலையில் இரு கைகளையும் வைத்தபடி புழுங்கினாள்.


எல்லோரும் கடந்து சென்றுகொண்டிருந்த அந்த அறைப்பிணத்தை பார்த்து ஏன் அப்படி பதனறிப்போனாய்?

சாகும் நொடியில் என்னை பெற்றவளை கண்டது போல் இருந்ததுடி எனது மனநிலை.

உனது அந்த துடிப்பும் கண்களில் இருந்த வேதனையும் என்னை எப்படியேனும் உயிர்பிழைத்து விடு என்று அறைக்கூச்சட்டுக் கொண்டே இருந்தது.


என்னன்னா? எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டே இருக்கிங்க ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க என்று கூறி என் சிரத்தை தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்து தீன குரலில்...உங்களுக்கு ஒன்றும்மில்லை பய்ப்படாதீங்க என்று திரும்பி திரும்பி நான் மருத்துவமனை உள்செல்லும் வரை என்னுடனே இருந்து சொல்லிக்கொண்டே இருந்தாய் நினைவிருக்கிறதா?பிறகு நான் உன்னை எங்கே என்று தேடுகையில் உன்னை காணவில்லை..நண்பன் மாத்திரமே என்னுடன் இருந்தான்.

நன்றி என ஒரு வார்த்தையில் முடித்துவிட எனக்கு தெர்ல கயல்.

உன்ன நான் எப்போ பார்பேனு ஏங்காத நாள் இல்ல கயல்.


எப்படி பார்ப்பேன்னு தெரியல..ஆனா நா மறுபடியும் உன்ன கட்டாயம் பார்பேனு என்னோட மனசு சொன்னது..


அது மாதிரியான ஒன்னு எனக்கு மறுபடியும் நடந்ததுன்னு அவன் சொன்னதும் வியப்படைந்தவளாய் அவனை பார்வையை அகலவிரித்து நோக்கினாள் கயல்.!-suganya_kk


If you like my story please share with your friends and family.


#tamilstory #instatamil #tamilmarriagestory #storytamil #storyofatamilgirl #tamil #love #kollywood #tamilmemes #thalapathy #tamilnadu #tamilcinema #vijay #tamilsong #tiktok #chennai #tamilbooks #igwriter #tamilquotes #tamilactress #thala #tamilmemes #tamilan #trending #tamilbgm #tamizhachi #tamilwriter #tamilstory #tamilnovel #tamilstatus #tamily #tamilsongs #tamillyrics #tamilmovie #tamillove #vijaytvRecent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com