முட்கள்...!

அவளின் அத்தனை வெட்கச்சிதறல்களையும் அவளின் அந்த அழகான புன்னகையில் மறைத்துக்கொள்ள முயற்சி செய்து தோற்றவளாய் அவனின் வரவை எதிர்பார்த்திருந்தாள். நெருங்கி கொண்டிருக்கும் பதட்டமும் சந்தோஷமும் கலந்த அவளது அந்த நிமிடங்கள் மிகவும் கணத்துக்கொண்டே இருந்தது.செய்வதறியாது தனக்குத்தானே சிரித்துக் கொண்டவளாய் கைவிரல்களை ஒன்றோடு ஒன்றாய் பிண்ணியபடி அலங்கார பொம்மையாய் அமர்ந்திருந்தாள். அவளின் அந்த அனுபவம் அவளுக்கு வினா அலைகளை வரிசையாக தொடுத்துக்கொண்டே இருந்தது.


Marriage story tamil, love story tamil

கண்களை படபடவென அடித்துக்கொண்டு நேரில் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்?எல்லோரிடமும் எப்படி பழகுவார்?அவரின் குணநலங்கள் எப்படிபட்டவையாய் இருக்கும்?என்னை என் போக்கிலேயே ;எனது நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொள்பவராய் இருப்பாரா?என எத்தனை எத்தனை கேள்விக்கனைகள் அவளின் மனதையும் புத்தியையும் அடுத்தடுத்து துளைத்து எடுத்துக் கொண்டிருந்தன.நகங்களை எடுத்துக் கொய்ய முற்படுவதும் மறுநொடி நகப்பூச்சு கலைந்து விடப் போகிறது என தலையில் கொட்டும் தாயிடம் அம்மா என்றாகி கொஞ்சுவதுமாய் நகர்ந்து கொண்டிருந்தது.

இன்னமும் நீ சிறுபிள்ளை இல்ல..பொறுப்பாய் நடந்துக்கனும்னு பலரின் கண்டிப்பு கலந்த அன்பும் ஆங்காங்கே அவளின் மேல் விழுந்தவண்ணம் இருந்தது..

தன்னை சுற்றி நடக்கும் அனைத்திற்கும் ம்ம்ம் கொட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தபடி கனவுலகில் உலவிக்கொண்டிருந்தாள்.

அப்போது வீட்டு வாசலில் கீர்ச்சென்ற சத்தத்துடன் வந்து நின்றது அந்த வெள்ளை நிற இனோவா.


உள்ளே நுழைந்த அவளது தோழி, கனவிலிருந்து வெளியில் வா..!வரவேண்டிய எல்லாரும் வந்தாச்சு என்றாகி உழுக்கினாள் சாரதா ..!

கனவில் இருந்து விழித்துக்கொண்டவளாய் எழுந்து நின்றவள் அத்தனை உணர்வுகளையும் என்ன செய்வதென்றே புரியாமல் நடுக்கத்துடன் நின்றிருந்தாள்.

வாங்க வாங்க என்று அவர்களை வரவேற்கும் தனது அப்பா மற்றும் சித்தப்பாவின் குரல்கள் அவளது காதுகளில் கனீரென எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.

மாப்பிள்ளை ரொம்பவே நல்வரா தெரியிராரு என்றாள் சாரதா.

பார்த்தவுடனே தெரியுமா என்ன? நால்லவரா தெரிந்தால் நீயே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று கலாய்த்துக் கொண்டிருந்தாள் கயல்.

நீ மட்டும் வேணாம்னு சொன்னா என் ப்ளான் அதுதான் என்றபடி கண்ணடித்து செய்கை செய்தாள்.ஆஹான்..!என்றபடி இடுப்பில் தன் இரு கைகளையும் வைத்தபடி ஒரு கையால் கலையாத அவளது முந்தி மடிப்புகளை எடுத்து தோளில் போட்டபடியே துரத்த முனைந்தாள்.விளையாட்டெல்லாம் போதும் எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க..உன் குறும்புத்தனத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு விடு,என்று கூறி அவளின் முட்டை முழியின் குழந்தை தனத்தை எண்ணியபபடி; முகத்தை அள்ளி எடுத்து உச்சி நுகர்ந்தாள் கயலின் அம்மா ராசம்மா!

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com