மூக்குத்தி

கதை:மூக்குத்தி

வலைபக்கம்:www.tamilmai.com


கண்டாங்கி சேல கட்டுன பொண்ணுணாலும் கால்சட்டபோட்ட பொண்ணுணாலும் மூக்குத்தி தாண்டி அழகு.மூக்குத்தி அரும பெரும தெரியுமாடி ஒனக்கு.மூக்குத்தி போட்டப்புரந்தேன் என் கடுகடுப்பும் உந்தாத்தம் சிடுசிடுப்பும் அப்படியே கொறஞ்சிருக்கு புள்ள என அங்காங்கே இருந்த தன் அத்தனை பொக்கை வாய் பற்களுடன் சுருங்கம் விழுந்த தோளில் வெட்கமும் பளிச்சென மிளிறும் வண்ணம் வெற்றிலையை குத்திக்கொண்டே உபதேசித்து கொண்டிருந்தாள் ராக்கின் பாட்டி.


வெற்றிலை போட்ட அந்த வாயின் எச்சிலை உமிழ்ந்த படி என்னடி என்னத்த சொன்ன்லும் கேக்கமாட்டேங்குறா இவ என்று சலித்துக்கொண்டது அந்த ராமாயி கிளவி.

என்னத்த சொல்ல ஆத்தா! அந்த காலத்துல என் அம்முச்சி எல்லாம் காதுல போட்ட தண்டட்டி பத்தாதுனு நிறைய பூடி தோட்ட காதெல்லாம் அடுக்கி அதோட மூக்குலயும் இரண்டு பக்கமும் லெட்சணமா மூக்குத்தி குத்திருக்கும்.இதோட மதிப்பு இந்த காலத்து புள்ளயலுக்கு எங்குட்டு தெரியுது ஆத்தா.


நானும் தான் போட்ருக்கே இதுதான் பேஷன் என்று தன் மூக்கை கிளவியிடம் காட்டினாள் ராக்கு வெவ்வே வெவ்வே என..


எடு வெலக்கமாத்த எண்ணத்த சொல்ல கை வளையல் காதுல இருக்கு.இது என்ன வளையமுடே.ஏதையோ பண்ணு மாப்புள வீட்டாளுவ நாளைக்கு வாரவ உன் அப்பா ஒன்ன தேடுவாரு அவர்ட பதிலுக்கு பதிலுக்கு பேசாத ராக்கு என்ன என்று கடிந்து கொண்டாள் ராக்குவின் அம்மா.

கால் மீ ராக்ஸ் என்று தன் தலைவிரிகோலத்தை சிலிப்பிக்கொண்டாள் ராக்கு.


அம்மைய ஒரு வழியா சமளிச்சுட்டோம் அப்பன் கண்ணுல படாம தப்பிச்சுட வேண்டியது தான் என சிவத்த கருப்பு கட்டமிட்ட மேல் சட்டையும் கால் சட்டையும் காதில் சாம்பல் நிற வளையலும்,மூக்கில் வளையமும்.அரக்கில்லா நெற்றியுடன் வெளியே கிளம்பினாள் அவள் கருமைக்கு அழகு சேர்த்த நேர்கொண்ட பார்வையை நெற்றி வழி வடித்தாள்.


சில வருடங்களுக்கு பிறகு...

ராக்கிற்கு வயது நாற்பதை எட்டியிருக்கும்.. கண்ணாடியின் முன்னே கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.அவள் அம்மை இறந்து வருடம் ஒன்னாச்சு அன்னிக்கு கணக்குப்படி.

நினைவுகள் அவளை அலைக்களித்தது.அவள் தனது வளைய மூக்குத்தியை கலட்டி வைத்து விட்டு ஒற்றைக்கல் மூக்குத்தியை அணிந்தபடி கண்ணாடியை பார்த்திருந்தாள்.

அவளின் குழந்தை அவளருகில் வந்து ஏனோ நீ இப்ப இன்னும் ரொம்ப அழகா தெரியிறியே அம்ஐ என்றபடி புன்முறுவலுடன் கட்டியணைத்துக்கொண்டது.


வெற்றிலை போட்ட அந்த வாயின் எச்சிலை உமிழ்ந்த படி என்னடி என்னத்த சொன்ன்லும் கேக்கமாட்டேங்குறா இவ என்று சலித்துக்கொண்டது அந்த ராமாயி கிளவி.

என்னத்த சொல்ல ஆத்தா! அந்த காலத்துல என் அம்முச்சி எல்லாம் காதுல போட்ட தண்டட்டி பத்தாதுனு நிறைய தோட்ட காதெல்லாம் அடுக்கி அதோட மூக்குலயும் இரண்டு பக்கமும் லெட்சணமா மூக்குத்தி குத்திருக்கும்.இதோட மதிப்பு இந்த காலத்து புள்ளயலுக்கு எங்குட்டு தெரியுது அம்மை.


நானும் தான் போட்ருக்கே இதுதான் பேஷன் என்று தன் மூக்கை கிளவியிடம் காட்டினாள் ராக்கு வெவ்வே வெவ்வே என..


எடு வெலக்கமாத்த எண்ணத்த சொல்ல கை வளையல் காதுல இருக்கு.இது என்ன வளையமுடே.ஏதையோ பண்ணு மாப்புள வீட்டாளுவ நாளைக்கு வாரவ உன் அப்பா ஒன்ன தேடுவாரு அவர்ட பதிலுக்கு பதிலுக்கு பேசாத ராக்கு என்ன என்று கடிந்து கொண்டாள் ராக்குவின் அம்மா.

கால் மீ ராக்ஸ் என்று தன் தலைவிரிகோலத்தை சிலிப்பிக்கொண்டாள் ராக்கு.


அம்மைய ஒரு வழியா சமளிச்சுட்டோம் அப்பன் கண்ணுல படாம தப்பிச்சுட வேண்டியது தான் என சிவத்த கருப்பு கட்டமிட்ட மேல் சட்டையும் கால் சட்டையும் காதில் சாம்பல் நிற வளையலும்,மூக்கில் வளையமும்.அரக்கில்லா நெற்றியுடன் வெளியே கிளம்பினாள் அவள் கருமைக்கு அழகு சேர்த்த நேர்கொண்ட பார்வையை நெற்கறி வழி வடித்தாள்.


சில வருடங்களுக்கு பிறகு...

ராக்கிற்கு வயது நாற்பதை எட்டியிருக்கும்.. கண்ணாடியின் முன்னே கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.அவனள் அம்மை இறந்து வருடம் ஒன்னாச்சு அன்னிக்கு கணக்குப்படி.

நினைவுகள் அவளை அலைக்களித்தது.அவள் தனது வளைய மூக்குத்தியை கலட்டி வைத்து விட்டு ஒற்றைக்கல் மூக்குத்தியை அணிந்தபடி கண்ணாடியை பார்த்திருந்தாள்.

அவளின் குழந்தை அவளருகில் வந்து ஏனோ நீ இப்ப இன்னும் ரொம்ப அழகா தெரியிறியே அம்ஐ என்றபடி கட்டியணைத்துக்கொண்டது.

-suganya_kk


பிடித்திருந்தால் பகிரவும்....


For more premium story updates subscribe www.tamilmai.com தாங்கள் முக்குத்தி அணிந்திருப்பவரா?எவ்விதமான மூக்குத்தி அணிந்துள்ளீர்கள்? மூக்குத்தி பற்றிய உங்கள் கருத்து என்ன?கமெண்ட்ஸ்ல் குறிப்பிடுங்கள்

#tamilnovel #shortstory #tamilkadhai #tamilshortstory #tamilcinema #tamilnews #tamilkavithai #beststorytamil #tamilsirukathaigal
Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com