Love always miss the one it cares for....

This is the poem about a girl suffered in many things when her loved ones is not near by....So,what are all the ways you missed your loved ones at times..?

இடைவெளி குறைந்து

நீ என்னவனாய் மாறியதேனோ? புழுதிக்குள் மனம் கனத்து உன்னை காண ஏங்கி

புதைந்தே நான் போவேனோ?

கண்ணீராய் கசிகின்றாய்

கனப்பொழுது காணாவிடில்...!

கருமேகங்கள் இருளாகி கரைந்துருகையில் இங்கு;

உனை எண்ணி என் கண்ணங்கள் நனைவதேனோ?

இந்த விட்டில் பூச்சியின் வெளிச்சம் நீ...!

உன்னால் என்றும் எரிவதிலேயே என் மகிழ்ச்சி...!

வீடும் கூட பலசமயம் நீ இல்லா அருகாமையில் எனக்கு திக்கற்ற காடாகி போகுமே...!

சன்னல் கம்பியும் நான் நாளும் பார்க்கும் கண்ணாடியும் நீயாய் எப்போதும் என்னிடம் தனிமையில் உன் பிம்பம் காட்டி என்னை கத்தியின்றி மரணிக்கச் செய்யுமே..!

உன் குழந்தைத்தனங்கள் யாவும் நினைவில் என்னை கூச்சலிட்டு அழைக்குமே என்செய்வேன்..?

எனக்கென சிலசமயம் அகந்தை விட்டொழித்து நீ செய்யும் அத்தனையும் நீங்கிச் சாவேனோ?

சமயலறை வாசம் அறியாத அவன் என் மகிழ்ச்சிக்காய் வேகாத பண்டம் தின்று உழன்று திரிவதை நான் அறிவேன்...!

அறிந்தாலும் பல சமயம் அதை வெட்டுக்காயத்தை மறைப்பவளாகி

வேதனையில் உழல்வேனோ?

குழிகண்ணத்தில் அவன் குறையாத புன்னகை காணாமல் நானும்; நாளும் பொழுதும் நலிந்தே தான் போவேனோ?

நாளாபுறமும் யாவரும் இருந்தும் யாதும் சூழாத் தீவாகி உன் நினைவில் சிக்கித் தவிப்பேனோ?

வாசம் தொலைத்த தாளம்பூவாய் உன் மனதில் வாசம் செய்ய எண்ணி எண்ணி உன் வரவை எதிர்பார்த்தே வாசலில் கண் புதைத்தே துயில்ந்து எழுவேனோ?மாற்றங்கள் உறைக்க நீயின்றி தனித்தே மௌனசிறையில் மூச்சடைத்து நான் மாண்டு மண்ணில் சிதையில் தொலைவேனோ?








Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com