கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளித்தது அந்த சூரியன்; அங்கிருந்த கண்ணாடி சன்னலை தன் அழகால் ஊடுருவ செய்து.

சற்றே தன் கைகளை கொண்டு முகம் மூடிக்கொண்டான்.கதிர் வீசிய அச்சூரியன் தன்னை எழுப்பும் எரிச்சலில் புரண்டு தன் தலையணையில் முகம் புதைத்தபடி தன் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு; எழுப்பாதே!என்னுடைய கெட்ட கோபத்திற்கு ஆளாகிவிடப்போகிறாய் என ஆளரவம் அற்ற அந்த தனி அரையில் நிந்தனை செய்தபடி மீண்டும் உரங்கலானான்.


அப்போது உள்ளே நுழைந்தாள் கீர்த்தி!அங்கே சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்த அவள் ;அச்சச்சோ ஆல்ரெடி ரொம்ப லேட் ஆச்சே!இவன் நல்லா தூங்கிட்டு ஏன்டி சீக்கிரம் என்ன எழுப்பலேனு கத்துவானே என்று வேகமாக வந்த அவள் காபி கோப்பையை கட்டிலின் அருகாமையில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கிச்சென்று கதற ஆரமித்த அந்த அலாரத்தின் தலையில் தட்டினாள்.அடிக்காதே;நான் என்ன செய்வேன் அவன் தான் எழவில்லையே!முடிந்தால் முயன்று பார்.இதனுடைய உன்னுடைய முறை என்று கவிந்து தன்னை குழுக்கி சினுங்கியது அந்த மேசை கடிகாரம்.


ம்ம்ம் என்று அதன் பரிகாச மொழி புரிந்தவள் போல தலையை ஆட்டிக்கொண்டே அவன் குழந்தை முகத்தை நோட்டம் விட்டிருந்தாள் கீர்த்தி.


எப்படி தூங்குறான் பாரு என்று சிடுசிடுப்பவள் போல இதழோரம் சிரித்துக்கொண்டாள்.


தூங்கும்போது தான் இன்னும் நீ எக்ஸ்ட்ரா அழகா இருக்க ,என்று அவன் தலைமுடியை கோதினாள்.அவள் முதுகில் இப்போது சூரியன் சுடுபெட்டி போட்டு எழுப்பினான்..ம்ம் மம்என்று முனகிக்கொண்டு தன் முதுகை சிலுப்பிக்கொண்டான்.இப்போது கீர்த்திக்கு சூரியன் மேல கோபம் வந்தது.அழையா விருந்தாளியை விரட்டுவது போல தன் சன்னல் திரையை இழுத்து சூரிய கதிரின் உன்நுழை வாசலை தடுத்தாள்.

சுற்றிலும் இருட்டு .கதகதப்பில் இருந்து விடுப்பை உணர்ந்த அவன் தேகம் முதலில் விழிப்புக் கொண்டது.கண்கள் சற்று எரிச்சலாய் சுருங்கியது.

ஓ.மை.காட் என மனதினுள் லாவிப்பித்துக்கொண்டு தனக்கு இடப்புறம் திரும்பிப்படுத்தான்.

இப்போது கீர்த்திக்கு அவனை எழுப்ப மனமில்லை என்றாலும் சற்று கெஞ்சலாக; எழுந்திரு நேரமாச்சு .இன்னும் என்ன தூக்கம்? அப்பறம் நா எழுப்பலேனு என்ட கோச்சுப்ப. காபி டேபிள்ள இருக்கு பாரு.ஹாட் வாட்டர் ரெடி.நீ காபி குடிச்சிட்டு ரெடி ஆகுறது தான் பாக்கி எழுந்திரு என்றாள் கீர்த்தி.

ஆலாரம் போல தூக்கத்தை கலைத்த எரிச்சலில் ம்ம்ச் கொட்டிக்கொண்டு ஏன்டி இப்டி பண்ற ;மனுசன நிம்மதிய தூங்கவிடேன்டி என்று திட்டிக்கொண்டு புரண்டு படுத்தான்.

மணி 8 ஆச்சு என்று கூறிவிட்டு கீர்த்தி தன் முகத்தை திருப்பிக்கொண்டு வாசல் பார்த்திருந்தாள்.

அவள் சத்தத்தையே காணவில்லை என்று தன் போர்வை விளக்கியவன் அவள் அமைதியாக இருப்பதைக் கண்டு எழுந்து அமர்ந்தான்.தன் கையை குவித்து குளிந்த தன் கையை அவள் கண்ணத்தில் பதித்து அந்த முகத்தை திருப்பினான்.அவள் தரை நோக்கியபடி ஏதும் பேசாதிருந்தாள்.

தன் முகத்தை அள்ளி எடுத்து நெற்றியில் முட்டிவிட்டு லேட் ஆச்சு தான் என்று புன்னகைத்து கண்சிமிட்டினான்.

அவள் தன் குறுநகையை மறைத்துக்கொண்டு கோபமாய் இருப்பவளாய் நடித்திருந்தாள்.

ம்ம்,சரி அப்போ நீ வரலியா நான் மட்டும் போகட்டுமா? என்றான் அவன்.

எங்க போற என்று புருவம் சுருக்கிக்கொண்டாள்.வேலை இருக்குனு தான சொன்ன இப்போ எங்க போற? வா நாம போற இடம் சர்ப்ரைஸ் என்றான்..நேராக தனது காரில் அவளை கண்ணை கட்டி ஏற்றிச்சென்று எங்கேயோ தனது பயணத்தை துவக்கினான்.

இன்னும் எவ்ளோ தூரம்; எங்க போறோம் சொல்லு என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

கார் மின்னல் வேகத்தில் பறந்தது.வழியில் என்னவெல்லாம் இருக்கிறது என்று கூறிவிட்டு எங்கே செல்கிறோம் என கணித்து விடு பார்க்கலாம் என்றான் அவன்.

அவளுக்கு மிகப்பிடித்த அந்த அமைதியான மாமல்லபுரம் கடற்கோவில் அது. பழங்கால கோவில்கள் சிலைகள் என்றால் கீர்த்திக்கு மிகவும் இஷ்டம்.

சரியாக பத்து மணிக்கு அவ்விடத்தை இருவரும் அடைந்தனர்.

அவள் கண்களில் கட்டை அவன் அவிழ்த்த மறுநொடி அவள் முன் அந்த கன்றுக்கு பசு பால் கொடுப்பதாய் தாய்மையின் அழகு வெளிப்படுத்துவதாய் இருந்தது அந்த சிலை.குகைகோயில் நீ ரொம்ப நாளா பாக்கனும்னு ஆசை பட்டேல என்று அவளை பார்த்து புன்னகை புரிந்தான்.அவள் கைகளில் ஒரு டாக்டர் ரிப்போர்ட் மற்றும் ஒரு துண்டு காகிதத்தை வைத்தான்.உனது தாய்மையை அழகுற வாழ வாழ்த்துகிறேன்.கவனமாக பார்த்துக்கொள் நம் காதலை என்று எழுதி இருந்தது.அந்த பைலை பிரித்துப்பார்த்தாள்.அதில் அவள் கருவுற்றிருப்பதாக செய்தி இருந்தது.கண்ணில் இருந்து மகிழ்ச்சியில் சொட்டிய கண்ணீர் பாசிடிவ் என்ற வாசகத்தின் மேல் விழுந்தது.அவள் அவனை தழுவிக்கொண்டாள்.தேங்க்யூ சோ மச் டா என்றாள்.ம்ம்ம் கோபமெல்லாம் போய்டுச்சா என்றான்.கோபமே வரலியே அப்பறம் எங்கே போகுறது என்றபடி அவன் கை விரலோடு தன் விரல் கோர்த்து அந்த கோயிலை நோக்கி பார்வைகளை பரிமாற்றிக்கொண்டு பேச்சில் மூழ்கிக் கொண்டு நடக்கலானார்கள்.

-சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com