அன்னம்....!


அன்னம் தண்ணி கொண்டாடி என்று அசட்டுத்தனமாய் உக்காந்து தன் தலையை சொறிந்தபடி கண்கள் திறந்திட முடியா வண்ணம் சொருகலாக சிமிட்டி கொண்டிருந்தான் எல்லன்.அன்னம் தொழுவத்துல நிக்கி! இந்தா அப்பு என்று தன் பிஞ்சு விரல் அவன் அகன்ற கைகளை பிடித்த வண்ணம் தண்ணி மொண்டு கொண்டுவந்தான் வேலன்.


என் ராசா நீ தூங்கலயா என்று எல்லன் கேட்க இல்லப்பு அன்னம் நம்ம பவுனு இன்னிக்கு கண்ணுக்குட்டு போடும்னு சொன்னுச்சா எனக்கு தூக்கமே வரல அதான் அத பாக்கலாம்னு எழுந்து உட்காந்திருக்கேன் என்றான் வேலன்.


ம்ம்ம்...என்னடி என்னாச்சு என்ன சொல்லுது பவுனு காலம்பற எழுந்து நிக்க...பொட்டகண்ணுணு நினைக்குதேமுல...!அதான் இப்படி பொறுமிக்கிட்டு கிடுக்குதா...


சாய்ங்காலம் வரைக்கும் பாரும் இல்லேனாக்க நம்ம மருது அண்ணங்கிட்ட சொல்லி மருந்து வச்சுடுவோம்ல..


மருந்துன்னு சொன்னதும்தேன் ஞாபகம் வருது நீ மறக்காம மருந்த சாப்புடுதியா?


ம்ம்ம்..என்று சமாளிக்கும்படி இழுத்தாள்.


அன்னம் மாத்திர சாப்பிடுறத பாத்தே இரண்டு நாள் ஆச்சு அப்பு என்றான் வேலன்.


என்னத நெசமா?நான் கூட இருந்து பாத்துக்க முடியல வே..ஒலுங்கா சாப்பிடுதே என்று சொல்லி அவள் மாத்திரை டப்பாவை திறந்து பார்த்தான் எல்லன்.


இன்னிக்கு இந்த கம்பவுண்டர் வேற இருக்கானானு தெரியலயே !ஏன்வே சொல்லல மாத்திர இல்ல .உன்ன நம்பி நாங்க ரெண்டு உசுரு இருக்கோம்னு நினைக்குதுல்ல ஒன் அன்னம் என்று வேலனிடம் வேகம் காமிச்சான்.


குளித்து முடித்து பேச்சோடு பேச்சாய் தன் அந்த மஞ்சள் நிறமாகிய அந்த பழைய வேட்டியையும் சட்டையையும் போட்டபடி தன் துண்டை மேலே போட்டுக்கொண்டு கஞ்சியை ஒரு தூக்கில் எடுத்தபடி ஓலை பெட்டிய தலையில் தூக்கி கொண்டு நடையை கட்டினான் எல்லன்.சாங்காலம் வாங்கிட்டு வடுதேம்முல்லேனு சொல்லிட்டு கிளம்பினான் எல்லன்.


அந்த நீண்ட நெடிய சாலைகளில் தன் தேய்ந்த ரப்பர் செருப்பின் ஓட்டை வழியே வந்த சூட்டை தன் வறுமையால் தாங்கிக்கொண்டு உப்பூபூபூபூபூபூ உப்பூபூபூபூபூ என கூவியபடி சென்றான் எல்லன்.


மதிய பொழுதும் வந்தது.உச்சி வெயில் மண்டையை பிளந்து மயக்கம் வருவதை உணர்ந்தவனாய் அஙகு சற்று தூரத்தில் தெரிந்த அந்த வேப்பமரத்தின் திண்டில் சென்று அமர்ந்தான்.


தன் தூக்கை திறந்தபடி தண்ணீரை மட்டும் கஞ்சியிலிருந்து மண்டி தன் தாகம் தீர்த்துக்கொண்டிருந்தான்.

சற்று தெளிந்ததும் அன்னத்துக்கு வேற மருந்து வாங்கியாரேன்னு சொல்லிட்டேன் கவர்மெண்டுக்கு ஆசுபத்திரிக்கு போகனும்னா கூட பஸ்சுக்கு காசு வேணுமே என்று சிந்தித்தபடி மூச்சிறைத்தவனாய் சற்று தழுதழுத்த குரலில் முழு சக்தியையும் வீசி உப்பூபூபூபூ என கரைந்தான்.


அங்கே அருகேயிருந்த வீட்டு பெண்மக்கள் நான்கைந்து பேர் மட்டுமே வந்தனர்.


ஒரு படி எம்புட்டுண்ணே...அஞ்சு ரூவா தான் மக்கா என்றார்.என்ன அஞ்சு ரூவாயா?மூனு படி பத்து ரூவான சொல்லுங்கண்ணே வாங்கிகிடுதேன் என்றது ஒரு அம்மா.


ஆமா போன வாரம் கூட அப்புடித்தாம்வே சந்தையில வாங்கியாந்தோம் என இன்னொரு பெண் எல்லனை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.


பல நிமிட போரட்டம் கட்டுபடியாகதுனு சொல்லிப்பார்த்தான்.உப்ப நீ யானை வெல குதிர வெல சொல்லுதியே நியாயமா இருக்குதானு அவர்களுக்கு தெரிந்த நியாயம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.


இதுவும் இல்லமப்போன அன்னத்தோட மருந்து கேள்விக்குறா தான் என தனது துண்டால் வியர்வையாய் வடிந்த அவன் இரத்தத்தை துடைத்துக்கொண்டு ;சரி மூனு படி பத்துன்னு வாங்கிகோங்க என்று அவர்களுக்கு அளித்தான்.


வந்தவர்களில் ஒரு பெண் வாடகை எட்டாயிரம் தான் துளிக்கூட குறைக்கமாட்டேன் என்று தன் கௌரவ பெருமை அடித்துது.


மற்ற இருவர் புது டிசைனா ஆத்தி எம்புட்டு என ஒருத்தி வினவ, மற்றொருவள் ம்ம்ம 20000 தேன் செய்கூலி சேதாரம் எல்லாம் சேத்து...

குரச்சு கேக்கலயா என பதில் மொழி வந்ததும் குறச்சு கேட்ட எனக்கு அவமானமில்ல..என் ஸ்டேடஸ்சுக்கு இது சாதரணம் என்று பெருமை பீத்திக்கொண்டாள்.


அன்றைய நாளில் அவன் மொத்தமே முப்பது ரூபாய் தான் சம்பாதிருந்தான்.அதில் அன்னத்திற்கு மருந்து வாங்கிரலாம் என்ற மனநிறைவுடன் வீடு திரும்பினான்.


வீட்டுக்கு திரும்பியவனை வேலன் கட்டியணைத்துக்கொண்டான்.அவன் தனது முப்பது ரூபாயில் வேலனுக்கு இரண்டு ரூபாய்க்கு பொறியும் பதினைந்து ரூபாய்க்கு அன்னத்திற்கு மருந்து வாங்கிவந்தான்.

பவுனுக்கு மருந்து வாங்கியரல அதுவும் பதினஞ்சாம் என்றபடி உள்ளே நுழைந்தான் எல்லன்.


பவுனுக்கு வழி வந்த பாடா இல்ல மொனங்கிடடே கெடக்குதா.நீரு போயி என் மருந்த குடுத்துட்டு பவுனுக்கு மாத்திர வாங்கியாங்க.

நாளைக்கு சர்கார் ஆசுபத்திரிக்கு போயி எனக்கு பாத்திக்கிட்டு மருந்தும் வாங்கியாரலாம் என்று கூறினாள் அன்னம் இரண்டு நாள் இருந்தாச்சு இன்னும் ஒரு நாள்ல நான் செத்துடமாட்டன்யா.ஆனா,அந்த வாயில்லா சீவன் தாங்குமானு தெர்ல என்றான்.


அவன் வீட்டினுள் இருந்தபடியே பவுனை பார்த்தான்.அது வலியால் துடிதுடித்து கொண்டிருந்தது.அதை பார்த்து சரி இரு வந்துர்றேன் என்று சொல்லி அவன் வாங்கிவந்த மருந்தை மாற்றி பவுனுக்கு மருந்து வாங்கிவந்தான் எல்லன்.எல்லனும் பவுனுக்கு மருந்து கொடுத் த ஒரு மணி நேரத்தில் பவுன் பால் வெள்ளை நிறத்தில் பெண்கன்று ஒன்று ஈன்றது.


எல்லனும் அன்னமும் பெருமகிழ்ச்சி கொண்டனர். நள்ளிரவு . மணி சரியாக 1.40. திடீரென எழுந்துக்கொண்ட அண்ணம் வலியால் துடிதுடித்தாள்.


புற்றுநோய் அவளுக்கு கற்பப்பை புற்றுநோய் முற்றி இருந்தது. அவளை மருத்துவனைக்கு அழைத்துச்செல்லக்கூட போதுமான பணம் அவனிடம் அப்போது இருந்திருக்கவில்லை.


அவள் வலியால் துடிதுடிப்பதை கண்டு அவன் கையால் தூக்கிக்கொண்டு வேலனை பத்திரமாக இருக்கும் படியாக கூறி அருகில் இருந்த கம்பவுண்டர் வீட்டிற்கு ஓடினான்.

போகும் வழியிலேயே அன்னம் தலை அவன் முதுகில் மிகுந்த கணத்தோடு விழுந்தது.

அப்படியே அதிர்ந்து நின்றான்.அவர்கள் இருந்ததோ ஊருக்கு அப்பால் உள்ள மலையில் ஓலை குடிசை..ஆதரவிற்கு கூட யாருமில்லை.


கதறி அழுதவனாய் அன்னத்தை அந்த இருள் சூழ்ந்த இடத்தில் கீழே போட்டு அவள் மூச்சற்று தான் இருக்கிறாள் என்ற பொய் நம்பிக்கையில் அவளை அன்னோம் அன்னோம் என்று அறைந்து எழுப்பிப் பார்த்தான்.அவள் எழவே இல்லை. அவன் கதறிய கதறலில் அந்த சுற்றுவட்டாரமே அதிர்ந்து போனது.நிலைக்குலைந்து போனான்.தன்னை எண்ணி நொந்த அவளை காப்பாற்ற இயலாது போனது தனது இல்லாமை என்ற எண்ணம் அவனை உறுத்தி உறுத்தியே கொன்று தின்றது.


அன்னத்தை தூக்கிக்கொண்டு வீடு திரும்பிய அவன் பித்து பிடித்தவன் போல அன்று பிறந்த அந்த கண்றை அன்னம் அன்னம் என்று கூறி தன் அழுகை ஸ்தம்பித்தவனாய் தொழுவத்திலேயே படுத்துவிட்டான்.


வேலன் இவன் படுத்திருப்பதை பார்த்து அன்னம் இறந்துவிட்டதை உணராமல் அன்னத்தின் அருகிலேயே முற்றத்தில் அந்த பனியில் பாவமாய் அவளின் கழுத்தை தன் பிஞ்சு கை சுற்றியபடி படுத்துறங்கினான்.-Suganya_kk


#tamilnovel #shortstory #tamilkadhai #tamilshortstory #tamilcinema #tamilnews #tamilkavithai #beststorytamil #tamilsirukathaigal

கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்..

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com